வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டார்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பொரும்பூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சி துறையின் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.19.5 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்படும் வாய்க்கால், ரூ.14.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கு, 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் நடைபெறும் சாலை பணிகள், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்டும் பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, கஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் ஷர்மிளா, கிராம நிர்வாக அதிகாரி சுகுமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.