வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
வெள்ளியணை ஊராட்சி பகுதியில் நேற்று ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். முதலில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ஜல்லிப்பட்டி பகுதியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரு.9 லட்சத்து 73 ஆயிரத்தில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு வரும் பணிகளையும், 80 ஆயிரத்தில் சமையல் கூடத்தினை புனரமைக்கும் பணியினையும் பார்வையிட்டார். மேலும், தாளியப்பட்டி கிராமத்தில் பொது நிதி மற்றும் பள்ளி சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்தில் அரசு தொடக்கப்பள்ளியை புனரமைக்கும் பணியினையும், குமாரபாளையம் பகுதியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.12 ஆயிரத்தில் தனிநபர் கழிவறை பணிகள் நடைபெற்று வருவதையும், பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.