காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு
அணைக்கட்டில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அணைக்கட்டு
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடக்க பள்ளிகளில் இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காலை உணவு திட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கம்மவார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். மேலும் மாணவர்களிடம் உணவு எப்படி இருக்கு? என்பது குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த கலெக்டர், காலை உணவு திட்டத்தில் ஏதாவது குறைபாடுகள் கண்டாலோ அல்லது புகார்கள் வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதேபோல் ஊசூர் அடுத்த சேக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களிடம் உணவு குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த கலெக்டர், காலை உணவுகளை சுத்தமாகவும், தரமாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சுரேஷ்பாபு, துணைத்தலைவர் ரமேஷ்பாபு, ஊராட்சி செயலாளர் பெருமாள், கிராம உதவியாளர் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.