வேட்டவலம் அரசு விடுதிகளில் கலெக்டர் ஆய்வு

வேட்டவலத்தில் உள்ள அரசு விடுதிகளில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

Update: 2022-09-28 11:55 GMT

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் அரசினர் ஆண்கள், பெண்கள் ஆதிதிராவிடர் நலன் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலன் அரசினர் மாணவியர் விடுதி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் அரசினர் மாணவர் விடுதிகளில் கலெக்டர் பா.முருகேஷ் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறை, உணவு பொருட்கள் இருப்பு விவரம், இருப்பு பதிவேட்டின் விவரம், வருகை பதிவேட்டின்படி மாணவர்களின் எண்ணிக்கை, மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் மாணவ-மாணவிகளிடம் விடுதிகளில் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.

முன்னதாக அங்கன்வாடி மையத்தில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையத்தில் குழந்தைகள் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது கீழ்பென்னாத்தூர் தாசில்தார் சக்கரை, வருவாய் ஆய்வாளர் அல்லி, பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள் முருகையன், ரமேஷ் மற்றும் விடுதி காப்பாளர்கள் அருண்குமார், ராஜா, ரூபாவதி, கிராம நிர்வாக அலுவலர் ராஜீவ்காந்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்