மறுவாழ்வு இல்லத்தில் கலெக்டர் ஆய்வு

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-07-21 18:31 GMT

திருப்பத்தூர் ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மறு வாழ்வு உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த இல்லத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு இல்லவாசிகள் தங்கும் அறை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, சிகிச்சை விவரங்கள், பதிவேடுகள் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர்களுடன் கலந்துரையாடி, மறுவாழ்வு இல்லத்தில் சேவை செய்யும் பணியாளர்களை கலெக்டர் பாராட்டினார். இந்த ஆய்வின்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மனநல மருத்துவர் பிரபவராணி, உதவும் உள்ளங்கள் தலைவர் ரமேஷ் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்