வேளாங்கண்ணியில் மாற்று சாலை அமைக்க கலெக்டர் ஆய்வு

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேளாங்கண்ணியில் மாற்று சாலை அமைக்க கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-03-26 18:45 GMT

வேளாங்கண்ணி:

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேளாங்கண்ணியில் மாற்று சாலை அமைக்க கலெக்டர் ஆய்வு செய்தார்.

வேளாங்கண்ணி மாதா பேராலயம்

வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்நிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக ஏராளமான சுற்றுலா பயணிகள் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் வருகை வருகின்றனர். இதனால் வேளாங்கண்ணி ஆர்ச் பகுதியில் இருந்து பேராலயம் வரை செல்லும் சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கலெக்டர் ஆய்வு

இதனை குறைக்கும் வகையில் மாற்று வழியில் சாலை அமைத்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பாக கலெக்டர் அருண் தம்புராஜூடம் கோரிக்கை மனு வைக்கப்பட்டது.இந்த கோரிக்கையை ஏற்று கலெக்டர் வேளாங்கண்ணிக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சுமார் 10 மீட்டர் அகலமுடைய புதிய சாலை அமைப்பது குறித்தும், இதற்காக தனியாரிடம் உள்ள நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை செய்தார்.

இந்த ஆய்வின் போது பேரூராட்சித் தலைவர் டயானாஷர்மிளா, துணை தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, தலைமை நில அளவையர் பாண்டியன், வேளாங்கண்ணி பேரூர் கழக தி.மு.க. பொறுப்பாளர் மரிய சார்லஸ், வருவாய் அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்