வள்ளலார் அவதரித்த இல்லத்தில் கலெக்டர் ஆய்வு
மருதூரில் உள்ள வள்ளலார் அவதரித்த இல்லத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
புவனகிரி,
புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் வள்ளலார் அவதரித்த இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டிடத்தின் உறுதிதன்மையை அவர் பரிசோதித்ததோடு அங்கிருந்த பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பக்தர்களின் கோரிக்கையின் படி இல்லத்தை தரம் உயர்த்தி தியான மையம் உள்ளிட்ட வசதிகளை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். முன்னதாக அவர் அங்கு தரிசனம் செய்தார்.