ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூரில் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பாலம்மாள் காலனி ரேஷன் கடையில் கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இருப்பில் வைக்கப்பட்டுள்ள அரிசி, துவரம்பருப்பு, கோதுமை, பாமாயில் மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் எடை சரிபாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் விற்பனையாளர் பெயர், செல்போன் எண், கடை வேலை நாட்கள், பொருட்களின் இருப்பு ஆகிய விபரங்கள் அடங்கிய தகவல் பலகை அமைக்க உத்தரவிட்டார். ஆய்வின்போது வட்ட வழங்கல் அலுவலர் திருமலை, விற்பனையாளர் உடனிருந்தனர்.