போலீஸ் நிலையங்களில் கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து போலீஸ் நிலையங்களில் கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார்.

Update: 2023-06-15 19:30 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் திண்டுக்கல் வடக்கு, தாடிக்கொம்பு போலீஸ் நிலையங்களில் கலெக்டர் பூங்கொடி தலைமையிலான மாவட்ட மேற்பார்வை குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களை கலெக்டர் பார்வையிட்டார்.

பின்னர் அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் முறையாக செயல்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகைதீன், மேயர் இளமதி, நகர போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்