குழந்தைகள் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு

பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு செய்தார்

Update: 2022-06-30 14:49 GMT

பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் கலெக்டர் முரளிதரன்  திடீர் ஆய்வு செய்தார். குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகள் எண்ணிக்கை, சுகாதார வசதி, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள், உணவின் தரம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். பின்னர், அதே ஊரில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு மாணவர் விடுதி, கொடுவிலார்பட்டியில் உள்ள ஆதரவற்ற பெண்கள், முதியோர்களுக்கான ஒருங்கிணைந்த காப்பகம் ஆகிய இடங்களிலும் கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன் ஜார்ஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்