புளியரை சோதனை சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

புளியரை சோதனை சாவடிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-02-18 18:45 GMT

செங்கோட்டை:

தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை அருகே புளியரையில் வருவாய்துறை வாகன சோதனை சாவடி, போலீஸ் சோதனை சாவடி, வட்டார போக்குவரத்து துறை சோதனை சாவடி உள்ளது.

இந்த சோதனை சாவடிகளில் தென்காசி மாவட்ட கலெக்டர் துைர ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகள் கேட்டறிந்தார். செங்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள மயானத்தில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடையை பார்வையிட்டார். மேலும் முத்துசாமி பூங்காவில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜெயப்பிரியா, சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் உள்பட பலர் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்