பந்தாரஅள்ளி கிராமத்தில் வேளாண் பயிர்கள் கணக்கெடுக்கும் பணியை கலெக்டர் ஆய்வு

Update: 2023-06-04 18:45 GMT

காரிமங்கலம்

தர்மபுரி மாவட்டம் முழுவதும் வேளாண் அடுக்கு மற்றும் பயிர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காரிமங்கலம் ஒன்றியம் பந்தாரஅள்ளி கிராமத்தில் வேளாண் அடுக்கு மற்றும் பயிர்கள் கணக்கெடுக்கும் பணியில் வேளாண் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும் என்று வேளாண் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது காரிமங்கலம் தாசில்தார் சுகுமார், மின் மாவட்ட மேலாளர் சதிசன் மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்