சார்பதிவாளர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

தேன்கனிக்கோட்டையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-06-04 17:08 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் ஜமாபந்தி நடந்தது. அப்போது கெலமங்கலம், ஜாகீர்கோடிப்பள்ளி, நாகப்பன் அக்ரஹாரம், பைரமங்கலம், ஆனைகொள்ளு, ஜெக்கேரி, போடிச்சிப்பள்ளி, பச்சப்பனட்டி, பிதிரெட்டி, ஒசபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட கிராம கணக்கு பதிவேடுகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்தார்.

மேலும் தனி பட்டா கேட்டு மனு வழங்கிய ஜெக்கேரி கிராமத்தை சேர்ந்த மூகமுனியம்மா என்பவருக்கு உடனடியாக தனிப்பட்டா ஆணையை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து தேன்கனிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண பதிவுகள் நடக்கும் பணிகள் மற்றும் பதிவேடுகளை திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, நில அளவை உதவி இயக்குனர் சேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தேன்கனிக்கோட்டை தாசில்தார் குருநாதன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்