மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர், ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர், ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-07 18:45 GMT

மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர், ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

காலியிடங்கள்

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஒரு வட்டார இயக்க மேலாளர் மற்றும் 19 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி பரமக்குடி வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் திருப்புல்லாணி-2, திருவாடானை-4, ஆர்.எஸ்.மங்களம்-2, மண்டபம்-1, நயினார்கோவில்-1, போகலூர்-1, முதுகுளத்தூர்-3, கமுதி-2, கடலாடி-3 என மொத்தம் ஒரு வட்டார இயக்க மேலாளர் மற்றும் 19 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் காலியிடங்கள் உள்ளன. வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க பட்டதாரியாக இருக்க வேண்டும்.

கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாடுகளில் இளங்கலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை உண்டு. 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மகளிர் நல மேம்பாட்டு திட்டம் தொடர்பான பணிகளில் 2-3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும். வரும் 22.2.23-க்குள் கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியில் விண்ணப்பதாரர்கள் புகைப்படம், சுயவிவரங்களுடன் உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். தேர்வு நடைபெறும், தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்