பாரம்பரிய பயிர்களின் கண்காட்சி

சிவகங்கை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பாரம்பரியமிக்க பயிர் ரகங்களை கொண்ட கண்காட்சி இன்று சிவகங்கையில் நடக்கிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-06 18:45 GMT

சிவகங்கை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பாரம்பரியமிக்க பயிர் ரகங்களை கொண்ட கண்காட்சி இன்று சிவகங்கையில் நடக்கிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கண்காட்சி

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பாரம்பரியமிக்க பல்வேறு சிறப்புமிக்க பண்புகளை கொண்ட பயிா் ரகங்களை சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் உள்ளது. இந்த பாரம்பரியமிக்க உள்ளூர் பயிா் ரகங்கள் மரபியல் ஆராய்ச்சியாளர்களுக்கு புதிய பயிர் ரகங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

எனவே தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு இதற்காக சிறப்பு கண்காட்சி நடத்திட வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த கண்காட்சிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருடத்திற்கு மூன்று முறை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று(சனிக்கிழமை) சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மரபியல் பன்முகத்தன்மை கண்காட்சி கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெறுகிறது.

உற்பத்தியை பெருக்க

இந்த கண்காட்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பாரம்பரியமிக்க உள்ளூர் ரகங்களை பார்வைக்கு வைக்க உள்ளனர். கண்காட்சிக்கு அனைத்து விவசாயிகளும் தங்கள் பகுதியில் விளையும் சிறந்த பண்புகளை கொண்ட பாரம்பரியமிக்க உள்ளூர் ரகங்களை காட்சி பொருளாக வழங்கி கண்காட்சியில் கலந்து கொண்டு விவசாயம் காத்து உணவு உற்பத்தியை பெருக்க உதவவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்