நிதி உதவி பெறும் விவசாயிகள் ஆதார் எநிதி உதவி பெறும் விவசாயிகள் ஆதார் எண்ணை உறுதி செய்ய வேண்டும்
சிவகங்கை மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 13-வது தவணைத்தொகை பெற விவசாயிகள் ஆதார் எண்ணை உறுதிசெய்ய வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 13-வது தவணைத்தொகை பெற விவசாயிகள் ஆதார் எண்ணை உறுதிசெய்ய வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பி.எம்.கிசான் திட்டம்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாட்டில் 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி" திட்டமானது பிப்ரவரி 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவி தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000, 3 தவணைகளில், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் 13-வது தவணையாக, அதாவது 2022, டிசம்பர் முதல் 2023 மார்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணைத்தொகை பெற பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்து உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே உதவி தொகை வழங்கப்படும்.
ஆதார் எண்
எனவே, பி.எம்.கிசான் தவணைத்தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடா்பாக கூடுதல் விவரம் அறிய விரும்பினால், தங்கள் பகுதி வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.