குடியரசு தின விழாவில் தியாகிகளை கவுரவித்த கலெக்டர்

சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தியாகிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கவுரவித்தார்.

Update: 2023-01-26 18:38 GMT

சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தியாகிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கவுரவித்தார்.

தேசிய கொடி

சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தினவிழா கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வந்த மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் வரவேற்றார். பின்னர் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதன்பின்னர் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பலூன்களை பறக்க விட்டனர். இதை தொடர்ந்து கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் திறந்த ஜீப்பில் ஏறிசென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டனர். இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகள் இருந்த இடத்திற்கு சென்று கலெக்டர், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

பரிசு கேடயம்

பின்னர் போலீஸ் துறையில் சிறப்பாக பணிபுரிந்த சிவகங்கை துணை சூப்பிரண்டு சிபிசாய்சவுந்தர்யன், தனிபிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ்சரவணன் (தேவகோட்டைநகர்), கணேசமூர்த்தி (காளையார்கோவில்), விஜயா (மானாமதுரை அனைத்து மகளிர் காவல்நிலையம்), ரவீந்தரன் (நெற்குப்பை), சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகர் மாணிக்கம், தனிபிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, முருகன் மற்றும் போக்குவரத்து பிரிவு சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அலுவலக ஊழியர்கள் உள்பட 59 பேருக்கு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

இதே போல் வருவாய்த்துறை மற்றும் பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 388 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.

விருது

மேலும் தூய்மை பாரதி திட்டத்தின் கீழ் முன்மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்ட பிரவலூர் ஊராட்சிக்கு விருது மற்றும் பரிசு தொகையை ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகனிடம் கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.30லட்சத்து 78 ஆயிரம், 133 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்