கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி
ஆனைமலையில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது
ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெத்தநாயக்கனூர், தென்சித்தூர், வேட்டைக்காரன்புதூர், உடையகுளம், ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. தாசில்தார் ரேணுகாதேவி முன்னிலை வகித்தார்.
முகாமில் கலெக்டரிடம் நத்தம் பட்டா மாறுதல் 25, முதியோர் உதவித்தொகை 10, வீட்டுமனை பட்டா கோருதல் 183 உள்பட 302 மனுக்களை அளித்தனர்.
முகாமில் தென்னை மரத்தில் பதநீர், கள் இறக்க அனுமதி வேண்டும் என தென்னங்கன்றுடன் விவசாயிகள் மனு அளித்தார், ஆனைமலை முக்கோணத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும், அய்யாமடையில் உயர் மின் கோபுரம் அமைக்க வேண்டும்,
சுள்ளிமேட்டு பகுதியில் தமிழக அரசால் கட்டப்பட்ட 50 வீடுகள் பாதியில் நிற்கும் விவகாரத்தில் கலெக்டர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
கோட்டூர் அருகே சமத்துவபுரத்தில் கல்குவாரி அருகே 2016-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட இலவச பட்டா ரத்தானதால் வேறு இடத்தில் இடம் தருவதாக கூறி தர வில்லை. அதற்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்பட மனுக்கள் அளிக்கப்பட்டன.
ஜமாபந்தி நடைபெற்ற இடத்தில் மனு அளிக்க வந்த பொது மக்கள் அமர்வதற்கு போதுமான இடவசதி செய்ய வில்லை. இதனால் மரத்தடியில் காத்து நிற்க வேண்டிய நிலை இருந்ததாக என பொதுமக்கள் தெரிவித்தனர்.