பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-01-10 18:40 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள அரிசி மற்றும் கரும்பு தரமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வந்த பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பினையும் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில் மாவட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 744 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.47.11 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 1.90 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முருகேசன், கூட்டுறவுத்துறை பணியாளர்கள், ரேஷன்கடை விற்பனையாளர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்