உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தன்னார்வ அமைப்பினருடன் கலெக்டர் ஆலோசனை

உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தன்னார்வ அமைப்பினருடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினாா்.

Update: 2023-09-03 19:00 GMT

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான தன்னார்வ அமைப்புகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், பொது வினியோகத்திட்ட அங்காடிகளில் முறைகேடுகளை களையவும், பொருட்களை கள்ளச்சந்தைக்கு திருப்பி விடுவது, பதுக்குவது ஆகியவற்றையும் களைய வேண்டும். அதோடு போலி குடும்ப அட்டைகளை கண்டுபிடித்து அவற்றை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் பொது வினியோகத்திட்ட அங்காடிகளில் தரமான பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்து அனைவருக்கும் பொருட்கள் வினியோகம் சென்றடைவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுகுறித்த புகார்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக பொது வினியோகத்திட்ட அங்காடிகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பெயர், தொலைபேசி எண்கள் மற்றும் மாநில, மாவட்ட நுகர்வோர் சேவை மையத்தின் தொலைபேசி எண்களை அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்துவதை உறுதி செய்வதோடு, நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சட்டங்கள் மாவட்டத்தில் செயலாக்கம் செயல்படுவதை குழு ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்