5 தாசில்தார்கள் பணியிடமாற்றம்

திருப்பூர் மாவட்டத்தில் 5 தாசில்தார்கள், 5 துணை தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-10-26 11:22 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் 5 தாசில்தார்கள், 5 துணை தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

5 தாசில்தார்கள்

திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் நிர்வாக நலன் கருதி, தாசில்தார் நிலையில் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மடத்துக்குளம் தாசில்தாராக இருந்த செல்வி காங்கயம் அதிதிராவிடர் நல (நிலம் எடுப்பு) தனிதாசில்தாராகவும், ஊத்துக்குளி தாசில்தாராக இருந்த தங்கவேல் காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், தமிழ்நாடு மாநில வாணிப கழக உதவி மேலாளராக (சில்லறை விற்பனை) இருந்த சரவணன் ஊத்துக்குளி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோல் காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக இருந்த பானுமதி மடத்துக்குளம் தாசில்தாராகவும், காங்கயம் ஆதிதிராவிடர் நல (நில எடுப்பு) தனிதாசில்தாராக இருந்த நந்தகோபால் திருப்பூர் தமிழ்நாடு வாணிப கழக உதவி மேலாளராக (சில்லறை விற்பனை) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

5 துணை தாசில்தார்கள்

இதுபோல் 5 துணை தாசில்தார்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சிவசுப்பிரமணியன் திருப்பூர் தெற்கு வட்ட வழங்கல் அதிகாரியாகவும், திருப்பூர் துணை தாசில்தாராக இருந்த தமிழேஸ்வரன் கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட தலைமை உதவியாளராகவும், தெற்கு வட்ட வழங்கல் அதிகாரியாக இருந்த புஷ்பராஜன் மாவட்ட கலெக்டர் அலுவலக வரவேற்பு துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பல்லடம் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த முருகேஸ்வரன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-2 துணை தாசில்தாராகவும், சாலை மேம்பாட்டு திட்ட துணை தாசில்தாராக இருந்த சிவக்குமார் பல்லடம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பிறப்பித்துள்ளார்.

------------

Tags:    

மேலும் செய்திகள்