மாவட்டத்தில் யாருக்கும் டெங்கு பாதிப்பு இல்லை கலெக்டர் ஆஷா அஜீத் தகவல்

மாவட்டத்தில் யாருக்கும் டெங்கு பாதிப்பு இல்லை என்று கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்தார்.

Update: 2023-09-14 18:45 GMT


சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர்ஆஷா அஜீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகள் நோய் தடுப்பு பிரிவு, மனநல நோய் பிரிவு, தொற்று நோய் சிகிச்சை சிறப்பு பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

மருத்துவமனையில் முழுவதுமாக ஆய்வு செய்ததில் காணப்பட்ட சிறு குறைபாடுகளை சரி செய்யும்படி தெரிவித்துள்ளேன். மேலும் தற்சமயம் பரவி வரும் வைரஸ் காய்ச்சல்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நோய் அறிகுறியுடன் வருபவர்களை முறையாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை நமது மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு யாருக்கும் இல்லை. இருந்தபோதிலும் அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மருத்துவக்கல்லூரி முதல்வர் சத்தியபாமா, உதவி மருத்துவ அலுவலர் முகமது ரபிக் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்