வெடிபொருள் சட்ட விதிமுறைகளை அனைத்து பட்டாசு ஆலை உரிமையாளர்களும் கடைபிடிக்க வேண்டும் கலெக்டர் அருண்தம்புராஜ் வேண்டுகோள்

வெடிபொருள் சட்ட விதிமுறைகளை அனைத்து பட்டாசு ஆலை உரிமையாளர்களும் கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Update: 2023-10-12 18:45 GMT

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு உற்பத்தி பணி மேற்கொள்ளும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்களுடன் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பேசுகையில், தொழிற்சாலைகள் சட்டம்- 1948 மற்றும் இந்திய வெடிபொருள் சட்டம் 1884-ல் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு விதிமுறைகளை அனைத்து பட்டாசு உற்பத்தி மேற்கெள்ளும் தொழிற்சாலை உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டும். தொழிற்சாலையில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களையும் விபத்து காப்பீட்டு வரையரைக்குள் கொண்டு வர வேண்டும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உற்பத்தி பணிகள் மேற்கொள்ளும் போது மாவட்ட வருவாய் அலுவலர் உரிமத்தில் வரையறுக்கப்பட்டுள்ள வேதி பொருட்களின் அளவீடுகளுக்கு அதிகமாக வைத்து உற்பத்தி பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்றார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், துணை இயக்குனர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மகேஷ்வரன் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்