கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசிய கொடி ஏற்றினார்

75-வது சுதந்திர தினத்தையொட்டி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசிய கொடி ஏற்றிவைத்து, ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Update: 2022-08-15 12:36 GMT

75-வது சுதந்திர தினத்தையொட்டி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசிய கொடி ஏற்றிவைத்து, ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கலெக்டர் கொடியேற்றினார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 75-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.பாலகிருஷ்ணன் உடனிருந்தார்.

இதனையடுத்து சிறப்பாக பணியாற்றிய நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் எஸ்.திலீபன் உள்பட 4 டாக்டர்கள், காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட 16 துறை அதிகாரிகள் என 238 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

நலத்திட்ட உதவி

மேலும் தமிழக அரசு சார்பில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் 144 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 29 லட்சத்து 14,814 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தேச ஒற்றுமை, சிறு குடும்பம் சீரான குடும்பம், குதிரை ஆட்டம் மற்றும் பாரம்பரிய பறை இசை உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராசசேகர், வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, நல்லதம்பி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர்.சூரிய குமார், சுகாதார துறை இணை இயக்குனர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்