தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் எர்ரபையனஅள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் எத்தனை பேர்? எந்தெந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் தொழிலாளர்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படுகிறதா? என்றும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், லோகநாதன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.