அரூர், பாலக்கோடு பேரூராட்சிகளுக்குதானியங்கி மஞ்சப்பை எந்திரம்கலெக்டர் சாந்தி வழங்கினார்

Update: 2023-04-24 19:00 GMT

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அரூர் மற்றும் பாலக்கோடு பேரூராட்சிகளுக்கு தானியங்கி மஞ்சப்பை வழங்கும் எந்திரத்தை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். சாலை, குடிநீர், பஸ் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா, சிட்டா பெயர் மாற்றம், பட்டா, புதிய ரேஷன் அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதிய தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டி மொத்தம் 373 மனுக்கள் வரப்பெற்றன.

இந்த கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாந்தி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

வீட்டுமனை பட்டா

இந்த கூட்டத்தில் வருவாய் துறை சார்பில் காரிமங்கலம் பகுதியை சார்ந்த 4 பயனாளிகளுக்கு ரூ.5.20 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அரூர் மற்றும் பாலக்கோடு பேரூராட்சிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் மதிப்பில் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் எந்திரங்கள் என மொத்தம் ரூ.6.20 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் நித்தியலட்சுமி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்