பிக்கனஅள்ளி ஊராட்சியில் கலெக்டர் திடீர் ஆய்வு மாணவர்களுக்கு கற்பித்தல் திறனை மேம்படுத்த உத்தரவு

பிக்கனஅள்ளி ஊராட்சியில் கலெக்டர் திடீர் ஆய்வு மாணவர்களுக்கு கற்பித்தல் திறனை மேம்படுத்த உத்தரவு

Update: 2022-10-01 18:45 GMT

காரிமங்கலம் அருகே உள்ள பிக்கனஅள்ளி ஊராட்சியில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர் காலாண்டு கணக்கு தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அவர்களிடம் இருந்து கலெக்டர் சாந்தி கணக்கு தேர்வு வினாத்தாளை வாங்கி அதில் கேட்கப்பட்டிருந்த சில கேள்விகளை மாணவர்களிடம் கேட்டார். அப்போது மாணவர்களுக்கு அடிப்படை கணித அறிவில் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கணக்கு பாடத்தை மாணவர்களுக்கு தெளிவாக புரியும் வகையில் கற்பிக்க வேண்டும்.

மாணவர்களின் கணித அறிவு மேம்பட இல்லம் தேடி கல்வி மையங்களில் சீரிய முறையில் கற்பித்தல் திறனை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்