மழைக்காலத்தையொட்டி வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தல்
மழைக்காலத்தையொட்டி வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தல்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு பருவமழை தற்போது தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது மழைக்காலத்தையொட்டி பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், டெங்கு, மலேரியா, மஞ்சள் காமாலை மற்றும் வாந்திபேதி போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் நன்கு கொதித்து ஆறிய நீரையே குடிநீராக பயன்படுத்த வேண்டும். அல்லது குளோரினேசன் செய்யப்பட்ட நீரினை மட்டுமே குடிக்க வேண்டும். சூடான உணவு பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும். தேவையின்றி தேங்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.