எத்தலப்ப நாயக்கருக்கு அரங்கம் அமைக்கும் பணி

தளியில் சுதந்திர போராட்ட வீரர் எத்தலப்ப நாயக்கருக்கு அரங்கம் அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

Update: 2023-08-08 15:00 GMT

தளியில் சுதந்திர போராட்ட வீரர் எத்தலப்ப நாயக்கருக்கு அரங்கம் அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

வீரபாண்டிய கட்டபொம்மனை நயவஞ்சகமாக தூக்கிலிட்ட ஆங்கிலேயருக்கு பாடம் கற்பிக்கும் வகையில், தஞ்சையில் இருந்து திருப்பூர் மாவட்டம் தளிக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் ஆண்ட்ரூ கேதிஷ் என்ற ஆங்கிலேயரை தூக்கிலிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பநாயக்கர் நினைவைப் போற்றும் வகையிலும், இன்றைய தலைமுறையினர் அவரது வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையிலும் திரு உருவச்சிலை மற்றும் அரங்கம் அமைக்க முடிவு செய்ப்பட்டது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கடந்த பிப்ரவரி மாதம் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். இதையடுத்து அரங்கம் அமைக்கும் பணி பொதுப்பணித்துறை மூலமாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காண்டூர் கால்வாய்

அதைத்தொடர்ந்து காண்டூர் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ. 72 கோடி மதிப்பிலான புனரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடித்து தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.

முன்னதாக புங்கமுத்தூர் ஊராட்சி கரட்டூர் உண்டு உறைவிடப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், உடுமலை தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் வழங்கல் பணிகள் தொடர்பாக ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வின் போது உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் கண்ணாமணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் தியாகராஜன் (நீர் வள ஆதாரம்) மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் ஆதிசிவன், உதவிப் பொறியாளர்கள் மாரிமுத்து, ஜெயக்குமார், முத்துக்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்