தர்மபுரியில் அறநிலையத்துறை சார்பில் வள்ளலார்-200 முப்பெரும் விழாகலெக்டர் சாந்தி பங்கேற்பு
தர்மபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் 200 முப்பெரும் விழா தர்மபுரி குமாரசாமிப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சமர்பதி தலைமை தாங்கினார். தர்மபுரி உதவி ஆணையர் உதயகுமார் வரவேற்று பேசினார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு வள்ளலார் முப்பெரும் விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் கேடயத்தை வழங்கினார். மேலும் சமரச சுத்த சன்மார்க்கத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் வள்ளலார் 200 முப்பெரும் விழா சிறப்பு உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் உமாபதி, இளங்கோ, அருள் நந்தி சிவம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அன்பழகன், குப்பன், கோவில் ஆய்வாளர்கள் சங்கர், தனசூர்யா, செயல் அலுவலர்கள் ஜீவானந்தம், ராதாமணி, சிவகுமார், ராஜகோபால் மற்றும் ஏராளமான சமரச சுத்த சன்மார்க்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவையொட்டி வள்ளலார் பற்றிய பல்வேறு சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் ஜோதி வழிபாடு நடைபெற்றது.