அன்னதான உண்டியல் மூலம் ரூ.1¼ லட்சம் வசூல்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1¼ லட்சம் வசூலானது.

Update: 2023-09-02 18:45 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1¼ லட்சம் வசூலானது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அன்னதான திட்டம் பக்தர்களின் நன்கொடை மூலம் மற்றும் கோவிலில் உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதுபோல இந்த மாதத்துக்கான உண்டியல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 611 வசூலாகி இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்