ஸ்ரீரங்கத்தில் புனித மண் சேகரிப்பு

ஸ்ரீரங்கத்தில் புனித மண் சேகரிக்கப்பட்டது.

Update: 2023-10-04 19:12 GMT

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை அம்ருத் மகோத்சவம் என இந்தியா கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 75-வது சுதந்திர ஆண்டு நினைவு ஸ்தூபியை மத்திய அரசு டெல்லியில் அமைக்க உள்ளது. இதற்காக என் மண், என் தேசம் என்ற முழக்கத்துடன் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் புனித தலங்களில் இருந்து அமிர்தகலஷ் என்ற பானையில் மண் சேகரிக்கப்பட்டு தபால் துறையின் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட உள்ளது. இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை, குணசீலம், வாளாடி, சிறுகமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புனித மண் சேகரிக்கப்பட்டு பானையில் சேர்க்கும் நிகழ்ச்சி ஸ்ரீரங்கத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வட்ட அஞ்சல் அதிகாரி சாருகேசி தலைமை தாங்கி, புனித மண் சேகரிக்கப்பட்ட பானையை ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பழனிசாமியிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல அஞ்சல் அதிகாரி நிர்மலாதேவி, உதவி இயக்குனர் பசுபதி உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்