கோவையில் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு
கோவையில் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியாகியுள்ளனர்.
கோவை,
கோவையில் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வெளியான முதல் கட்ட தகவல் வருமாறு: - கல்லூரியில் ஏற்கனவே இருந்த பக்கவாட்டு சுவரை ஒட்டி 10 அடி அளவிற்கு பக்கவாட்டு சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்ததாகவும் அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் அதில் சிக்கியதாக கூறப்படுகிறது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பலியானதாகவும் 2 பேர் காயங்களுடன் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 4 பேரில் மூன்று பேர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் வட மாநில தொழிலாளி எனவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.