எவரெஸ்ட் மாரியப்ப நாடார் பள்ளியில் நாணய கண்காட்சி

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் பள்ளியில் நாணய கண்காட்சி நடந்தது.

Update: 2022-11-26 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் 35-வது ஆண்டு நாணய கண்காட்சி நேற்று நடந்தது. தொடக்க விழாவிற்கு பள்ளி தலைவர் மற்றும் செயலாளர் அய்யனார் தலைமை தாங்கினார். கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ஷியாம், நிர்வாக அதிகாரி சுசிலா தேவி, தலைமை ஆசிரியர் வெங்கடேஷ், மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றினார்கள்.

கண்காட்சியில் மாணவ- மாணவர்களின் அரியவகை நாணயங்களின் படைப்புகள், வ.உ.சி. சுதேசி கப்பல் உருவம் பொறித்த நாணயங்கள், காந்தி உருவம் பொறித்த நாணயங்கள், நேரு பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயங்கள், எவரெஸ்ட் பள்ளி உருவம் பொறித்த நாணயங்கள், தஞ்சை பிரகதீஸ்வரர் 1000-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட ரூ.1000, ரூ.350, ரூ.200, ரூ.150, ரூ.125, ரூ.100 நாணயங்கள், சரித்திர கால நாணயங்கள், ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ஞாபகார்த்த நாணயங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஸ்டாம்ப் வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர் விசாலாட்சி நன்றி கூறினார். கண்காட்சி ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் வரலாற்று ஆசிரியர்கள் சித்ரா, விசாலாட்சி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்