கோவை-தன்பாத் வாராந்திர ரெயில் மார்ச் மாதம் வரை நீட்டிப்பு
கோவை-தன்பாத் வாராந்திர ரெயில் மார்ச் மாதம் வரை நீட்டிப்பு
திருப்பூர்
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்-கோவை இடையே கடந்த மாதம் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த ரெயில் சேவை வருகிற மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தன்பாத்-கோவை வாராந்திர ரெயில் வருகிற 5-ந் தேதி முதல் மார்ச் மாதம் 26-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தன்பாத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை கோவைக்கு அதிகாலை 4 மணிக்கு வந்து சேரும். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கும், ஈரோட்டுக்கு 1.35 மணிக்கும் செல்லும்.
கோவை-தன்பாத் வாராந்திர ரெயில் புதன்கிழமை நள்ளிரவு 12.50 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு தன்பாத் சென்று சேரும். இந்த ரெயில் 8-ந் தேதி முதல் மார்ச் மாதம் 29-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. ஈரோட்டுக்கு புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கும், சேலத்துக்கு 3.30 மணிக்கும் செல்லும்.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.