மாநில கிரிக்கெட் போட்டியில் கோவை அணி வெற்றி
மாநில கிரிக்கெட் போட்டியில் கோவை அணி வெற்றி பெற்றது.
கோவை
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கோவை, சேலம், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கோவை அணியும், திருப்பத்தூர் அணியும் மோதின. டாஸ் வென்று களம் இறங்கிய கோவை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 353 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் வீரர்கள் நவீன் 104 ரன்களும், பிரணவ் 81 ரன்களும் எடுத்தனர். இதனைத்தொடர்ந்து 354 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய திருப்பத்தூர் அணி 29 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 62 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. கோவை அணியின் பவுலர் சம்ரித் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
மற்றொரு போட்டியில் செங்கல்பட்டு அணி, திருவாரூர் அணியை எதிர்கொண்டது. முதலில் ஆடிய செங்கல்பட்டு அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்தது. அந்த அணியை சேர்ந்த பரத் 66 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய திருவாரூர் அணி 40 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. செங்கல்பட்டு அணி சார்பில் சந்தீப், தீபேஷ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.