கோவை-சேலம் பயணிகள் ரெயில் 30-ந் தேதி வரை ரத்து

கோவை-சேலம் பயணிகள் ரெயில் 30-ந் தேதி வரை ரத்து

Update: 2022-10-13 10:09 GMT

திருப்பூர்

கோவை-திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கோவை-சேலம் பயணிகள் தினசரி ரெயில் (எண்.06802) கோவையில் இருந்து தினமும் காலை 9.05 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் நேற்று முதல் வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதுபோல் சேலம்-கோவை ரெயில் (எண்.06803) நேற்று முதல் வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்