கோவை: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து - 4 பேர் படுகாயம்

கோவை அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 2 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-07-02 23:02 GMT

கோவை,

கோவை மாவட்டம், காளப்பட்டி குரும்பபாளையம் செல்லும் சாலையில் நேற்று இரவு 9.30 மணி அலவில் கார் ஒன்று கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது அந்த கார் எதிர் பாராதவிதமாக சாலையோரம் சென்று கொண்டிருந்த பெண்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

பின்னர் அங்கிருந்த மோட்டார் சைக்கிள் மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்து குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காருக்குள் சிக்கியவர்களையும், பலத்த காயமடைந்த பெண்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்தது தான் விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்