வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள்
கீழ்வேளூர், தலைஞாயிறில் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள்
சிக்கல்:
கீழ்வேளூர் ஒன்றியம் மோகனூர் ஊராட்சியில் மாவட்ட வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வேளாண்மை திட்டம் 2023-24-ன் படி 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 வீதம் 600 விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குனர் தேவேந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார். இதில் வேளாண் துணை இயக்குனர் ஹேமா ஹெப்சிமா நிர்மலா, வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு), ராஜலட்சுமி, வேளாண் உதவி அலுவலர் காளிதாஸ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இ்தேபோல் தலைஞாயிறு ஒன்றியம் ஆய்மூர் ஊராட்சியில் கலைஞரின் ஒருங்கிணைத்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார் தலைமை தாங்கி தென்னங்கன்றுகளை வழங்கினார். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் சாந்திவிஜயராகவன் வரவேற்றார். வேளாண்மை அலுவலர் நவீன் முன்னிலை வகித்தார். இதில் வேளாண்மை உதவி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் விவசாய பெருமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.