தேங்காய்-பருப்புகள் ரூ.10½ லட்சத்துக்கு ஏலம்
தேங்காய்-பருப்புகள் ரூ.10½ லட்சத்துக்கு ஏலம் போனது.
நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தென்னை பயிர் செய்துள்ளனர். தேங்காய் நன்று வளர்ந்தவுடன் பறித்து முழு தேங்காயாகவும், தேங்காய் பருப்புகளாகவும் விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நடந்த ஏலத்தில் 7 ஆயிரத்து 474 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.22.06-க்கும், சராசரியாக ரூ.23.30-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 82-க்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
இதேபோல் 10 ஆயிரத்து 248 கிலோ தேங்காய் பருப்பு ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.75.89- க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.53.33- க்கும், சராசரி விலையாக ரூ.68.88- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.8 லட்சத்து 74 ஆயிரத்து 288- க்கு ஏலம் நடைபெற்றது. தேங்காய் மற்றும் பருப்புகள் மொத்தம் ரூ.10 லட்சத்து 43 ஆயிரத்து 370-க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.