ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது

Update: 2022-06-17 19:59 GMT

வாடிப்பட்டி

மதுரை மாவட்ட விற்பனைக் குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனைக்குழு கண்காணிப்பாளர் திருமுருகன் தலைமையில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 12 விவசாயிகளின் தேங்காய்கள் 17 குவியலாக ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 12 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இந்த ஏலத்தில் அதிகபட்சமாக விலையாக ரூ.10.53-க்கும் குறைந்தபட்சமாக ரூ.5.27-க்கும் சராசரியாக ரூ.7.20-க்கும் ஏலம் போனது. இதனால் ரூ.2.66 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது. மேலும் 12 விவசாயிகளின் 1560 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் 7 வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக ரூ.84.21, குறைந்தபட்சமாக ரூ.56.10-க்கு சராசரியாக ரூ.79.91-க்கு ஏலம் போனது. இதனால் ரூ.1,24,717-க்கு கொப்பரை தேங்காய் வர்த்தகம்  .

Tags:    

மேலும் செய்திகள்