எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இதில் முதல் தரம் ஒரு கிலோ ரூ.73 முதல் ரூ.82 வரையும், 2-ம் தரம் ரூ.58 முதல் ரூ.68 வரையும் ஏலம் போனது. மொத்தம் 50 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து விற்பனையானது.