தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்

தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்

Update: 2023-06-13 10:49 GMT

பல்லடம்

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைமை அலுவலகம் உழவாலயத்தில் கட்சித் தலைவர் செல்லமுத்து தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் சின்ன காளிபாளையம் ஈஸ்வரன், மாநில பொருளாளர் ஈ.பாலசுப்ரமணியம், மாநில மகளிர் அணி செயலாளர் கே.சி.எம்.சங்கீதபிரியா, ஊடக பிரிவு செயலாளர் ஈஸ்வரன், இளைஞரணிச் ெயலாளர் காடாம்பாடி கணேசன், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் வரும் ஜூலை 5-ந்தேதி உழவர் தின விழாவை சிறப்பாக நடத்துவது. தமிழக அரசு ரேஷன்கடைகளில், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கட்சித் தலைவர் செல்லமுத்து கூறியதாவது:- திருப்பூர், கோவை மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தேங்காய் ஒன்றின் விலை ரூ.13 முதல் 14.50 வரை விலை கிடைத்தது. தற்போது தேங்காய் ஒன்றின் விலை ரூ.10 முதல் ரூ.11.50 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தென்னை விவசாயத்திற்கு பயன்படும் மருந்துகள், உரம், போன்றவைகள் விலை அதிகரித்துள்ள நிலையில் தேங்காய் விலை குறைவால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெயை வினியோகிக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்