சிதறுதேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

அவினாசி அருகே சிதறுதேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

Update: 2023-08-03 10:27 GMT


தேங்காய்விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளை காப்பாற்றவும் அனைத்து ரேஷன் கடைகளில் பாமாயில் தடை செய்து தேங்காய் எண்ணெய் வினியோகிக்க கோரியும், தென்னை, பனை விவசாயிகளை காப்பாற்ற கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்து கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தினர் தேங்காய் உடைத்து போராட்டம் நடத்தினர். அவினாசியை அடுத்த தெக்கலூர் பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்த சிதறு தேங்காய் உடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் எ.கே.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஈஸ்வரன், அவினாசி ஒன்றிய தலைவர் எம்.வேலுசாமி, தெக்கலூர் ஒன்றிய தலைவர் ஆறுச்சாமி, மகளிர் அணி தலைவர்ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெண்கள் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டு சிதறு தேங்காய் உடைத்து போராட்டம் நடத்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்