ரூ.2¾ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

Update: 2023-06-01 19:30 GMT

பனமரத்துப்பட்டி:-

சேலத்தை அடுத்த உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் வேளாண் மின்னணு சந்தை என்ற இணையதளம் மூலம் நடந்தது. வேளாண்மை துணைஇயக்குனர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் 44 விவசாயிகளும், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் கலந்து கொண்டனர். ஒரு கிலோ கொப்பரை தேங்காய் குறைந்தபட்சமாக ரூ.64-க்கும், அதிகபட்சமாக ரூ.73.55-க்கும் ஏலம் போனது. மொத்தம் 3.82 டன் கொப்பரை தேங்காய் ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்திற்கு விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்