தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு படையினர் அதிநவீன படகில் ரோந்து

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-08-13 17:03 GMT

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திர தினவிழா

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாளை (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களான ெரயில் நிலையம், பஸ்நிலையம், விமான நிலையம், துறைமுகம், கோவில்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையம், விமான நிலையத்தில் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

தீவிர ரோந்து பணி

இந்த நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும துணை சூப்பிரண்டு பிரதாபன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சைரஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் டொமிலன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தீவிர ரோந்து பணியை தொடங்கி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கடல் சூழ்ந்த மாவட்டம் என்பதால் வேம்பார் முதல் புன்னக்காயல் வரை உள்ள கடல் பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படையினர் 2 அதிநவீன படகுகள் மூலம் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்