நிலக்கரி சுரங்க விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2023-04-04 10:59 GMT

சென்னை,

நிலக்கரி சுரங்க ஏல நடைமுறைகளில் இருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நிலக்கரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைப்பதற்கான தொடக்க கட்ட பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்