வினாத்தாள் வடிவமைப்பு குறித்து பேராசிரியர்களுக்கு பயிற்சி

வினாத்தாள் வடிவமைப்பு குறித்து பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-09-27 18:16 GMT

கரூர் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியர்களுக்கான "விளைவு அடிப்படையிலான கல்வி மற்றும் புளும்ஸின் வகைப்படுத்தல் அடிப்படையிலான வினாத்தாள் வடிவமைப்பு" என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியை தேர்வுக்கட்டுப்பாட்டாளர் மற்றும் கல்லூரியின் உள்தர கட்டமைப்பு பிரிவு இணைந்து நடத்தியது. கல்லூரித் தேர்வுக்கட்டுப்பாட்டாளர் மற்றும் தமிழ்த்துறைத்தலைவர் கற்பகம் வரவேற்புரை ஆற்றினார்.

கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். விலங்கியல் துறைத்தலைவர் கார்த்திகேயன் வாழ்த்தி பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி தாவரவியல் துறைத்தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் செந்தில்குமார், பொருளியல் துறைப் பேராசிரியர் காளிராஜன் ஆகியோர் சிறப்புரையாளர்களாக பங்கேற்று கற்பித்தல் திறனில் உள்ள நுட்பங்கள் பற்றியும் வினாத்தாள்கள் அமைப்பு முறைகளையும் எடுத்துரைத்தனர். இதில் அறிவியல் பிரிவுப் பேராசிரியர்கள் மற்றும் கலைப்பிரிவு பேராசிரியர்களுக்கு என தனித்தனியாக பயிற்சி வழங்கப்பட்டது. முடிவில் கணிதத்துறை தலைவர் முருகாம்பிகை நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை முகுந்தன், ஜெகதீஸ் பாண்டி, விநாயகம் ஆய்வு செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்