கோ-ஆப்டெக்ஸ் மண்டல துணை மேலாளர் பலி

கடலூரில் ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல துணை மேலாளர் பலியானார்.

Update: 2023-05-05 20:12 GMT

கடலூர்:

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவருடைய மனைவி சுஜாதா(வயது 42). இவர்களுக்கு 11 வயதில் பெண் குழந்தையும், 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். சுஜாதா கடலூரில் சிதம்பரம் சாலையில் உள்ள முல்லை கோ-ஆப்டெக்சில் மண்டல துணை மேலாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இவர் சாவடியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு தினந்தோறும் சென்று மதியம் சாப்பிட்டு விட்டு, குழந்தைகளுக்கும் சாப்பாடு கொடுத்து விட்டு வருவது வழக்கம். அதன்படி நேற்று மதியம் சாப்பிடுவதற்காக சுஜாதா வீட்டுக்கு சென்றார். பின்னர் சாப்பிட்டு விட்டு, குழந்தைகளுக்கும் உணவு கொடுத்து விட்டு ஸ்கூட்டரில் கோ-ஆப்டெக்சுக்கு புறப்பட்டு வந்தார்.

கடலூரில் ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல துணை மேலாளர் பலியானார்.கடலூரில் ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல துணை மேலாளர் பலியானார்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சுஜாதா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் சுஜாதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றிய புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி மோதி பெண் அதிகாரி இறந்த சம்பவம் சக ஊழியர்களிடையேயும், உறவினர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்