மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மறுநாள் மதுக்கடைகளை மூட உத்தரவு

Update: 2023-04-01 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மகாவீர் ஜெயந்தியையொட்டி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள், உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களில் செயல்படும் பார்கள், முன்னாள் படைவீரர் மது விற்பனைக்கூடம் ஆகியவற்றை மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவை மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்